Saturday, 24 September 2011

பெருத்த வலியினொடு

வயிற்றில் எட்டி உதைத்து
இந்த உலகைக் காண
வெளியேறத் துடிக்கும்
உன் உந்துதலில்
என்
பிறப்புறுப்பில் ஏற்படுத்திய
எல்லையிலா வலியினொடு
உனை ஈனும் நிமிடங்களில்
உன்
முதல் குரல் கேட்டபடியே கண்ணயர்ந்தேன்.
உடலின் வெப்பம்
வெகுவென குறைந்து
போர்வைகளுக்குள் நடுங்கியபடியே
இடுப்பின் வலி நீங்காது
துடித்தபடி கிடந்தேன் - கூடவே
நீ பிறந்ததும்
அள்ளி அணைக்கமுடியா
பெருத்த வலியினொடும்...
                                                by  suresh

1 comment:

  1. இந்த உலகத்தில் எந்த ஒரு விஷயதொடும் ஒப்பிட முடியாதவள் அன்னை. மேற்கண்ட உங்களின் ஒவ்வொரு வரியும் வரிகளல்ல வலிகள். முதுமை எய்தி பிள்ளையின் அரவணைபிற்கு ஏங்கும் அம்மாக்களை சுமையாய் எண்ணி புறக்கணிக்கும் பாவிகள் படிக்க வேண்டிய பாடம் இது. உலக அன்னைகளின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு என்றும் உண்டு சுரேஷ். வாழ்த்துக்கள். (S.B.Sundharamoorthy-Ser.Eng.Diversey ind.Ltd)

    ReplyDelete