Wednesday, 7 September 2011

சிறுவயது உலகம்

தேங்கிய மழைநீரில் ஆடிக்கொண்டபடியோ...

வேலிகாத்தான் முட்செடிமீது
தலைதூக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
ஓணானை
வலையிட்டு பிடித்தபடியோ...

வழிநெடுக நிற்கும்
நாவல் மரங்களிலும்;புளிய மரங்களிலும்
பழங்கள் பறிக்கும் முயற்சியில்
மரத்தின் மீதேறியோ
கற்களை வீசியபடியோ...

உனிமுள் பூக்கள் பறித்து
ஒருவர் மீதொருவர் பூக்களை சொறிந்தபடியோ...

என வீடு திரும்பும்
பள்ளி சிறுவர்கள் உலகத்தில்
கற்க நிறைய இருக்கிறது!

1 comment:

  1. உங்களி வழைப்பக்கத்தை பார்த்து தான் எழுதும் ஆர்வம் தொற்றிக் கொண்டது அணைத்தும் தேரிய கவிதையாகவே உள்ளது விரைவில் புத்தக வடிவில் பார்க்க ஆசை

    ReplyDelete