வாழ்க்கையின் நதிதனில்
காதல் காமம் இரண்டுமே
கலந்தோடி
அர்த்தம் தேடுகிறது இரட்டைகிளவிபோல..
காதல்புரிய முன்வரும்போது
மோகமுள் குத்தி காமம் ஒழுகியது!
காமம் பருக முன்வரும்போது
நுழைவாயில் காதலால் திறந்தது!
காதல் நழுவி காமத்தில் விழுந்து-பின்
எழுந்து காதலையே உடுத்திக்கொள்கிறது!
காதல் சிலநேரம் காமத்தின் கதவைத் தட்டுகிறது;
சிலநேரம் கதவை உடைத்தெரிந்துவிட்டு
காதல் காமமாகிறது...!
காமமாகி காமமாகி பின் காதலாகிறது
காமத்தின் பிடியில் மேலும் காதலாகிறது.
புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிபோல்
காமத்தின் முன்னும் பின்னும் காதலால் நிறைகிறது...!
By Suresh
காதல் காமம் இரண்டுமே
கலந்தோடி
அர்த்தம் தேடுகிறது இரட்டைகிளவிபோல..
காதல்புரிய முன்வரும்போது
மோகமுள் குத்தி காமம் ஒழுகியது!
காமம் பருக முன்வரும்போது
நுழைவாயில் காதலால் திறந்தது!
காதல் நழுவி காமத்தில் விழுந்து-பின்
எழுந்து காதலையே உடுத்திக்கொள்கிறது!
காதல் சிலநேரம் காமத்தின் கதவைத் தட்டுகிறது;
சிலநேரம் கதவை உடைத்தெரிந்துவிட்டு
காதல் காமமாகிறது...!
காமமாகி காமமாகி பின் காதலாகிறது
காமத்தின் பிடியில் மேலும் காதலாகிறது.
புயலுக்கு முன்னும் பின்னும் அமைதிபோல்
காமத்தின் முன்னும் பின்னும் காதலால் நிறைகிறது...!
By Suresh
No comments:
Post a Comment