Wednesday, 7 December 2011

சுயமாக சுவாசிக்க

புதுமனைப் புகுவிழா
மாறாக
புதுவாழ்வில் புகும்விழா
என்றும்கூட
அழைக்கப்படலாம்
தன்னிறைவோடு....!

நடுத்தரங்களின்
உயர்ந்தபட்ச நோக்கமாக
பலவருட சேமிப்பின்
அடையாளமாக
இதுவே
இருக்ககூடும்...!

கம்பீரமாய் நின்று
நாம் வாழும் வாழ்வினை
அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும்
நம் இலட்சிய வீட்டின்
ஒவ்வொரு செங்கற்கல்லும்...!

புதிதாய் கட்டப்பட்ட
சொந்தவீட்டில் முதலில்
காலடி படும்போது
பாத நுனிவிரல்கூட
நிம்மதி பெருமூச்சு விடக்கூடும்...!

வாழ்ந்துப் பார்க்கத்தான் வேண்டும்
சொந்த வீட்டில்
சுயமாய் சுவாசிக்க...!

1 comment:

  1. தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதிவரும் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்..

    ReplyDelete